முல்லைத்தீவில் 26வயது கும்ப்ப பெண் தூக்கிட்டு தற்கொலை

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

முல்லைத்தீவு – கோயிற்குடியிருப்பு பகுதியில் இளம் குடும்பப் பெண்னொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

செல்வபுரம், கோயிற்குடிருப்பை சேர்ந்த சுஜிவிதன் சசிப்பிரியா வயது 26 என்பவரே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

குறித்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், மரணத்திற்கு காரணம் தற்போது வெளி மாவட்டத்தில் உள்ள மருமகன் சுஜிவிதன் தான் என உயிரிழந்த பெண்ணின் தந்தை பத்மநாதன் தெரிவித்துள்ளார்.

வீட்டின் அறையினுள் யன்னலில் துணிகயிறு ஒன்று கட்டி அதில் தூக்கிட்டுள்ளதுடன், சடலம் தரையில் இருப்பதால் ஆரம்ப கட்ட விசாரனையில் பொலிஸாருக்கும் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share this Article