முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்ட கல்விக்கும் அபிவிருத்திக்குமான நம்பிக்கை நிதியம் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட சதுரங்கச் சங்கம் என்பவற்றின் அனுசரணையுடன் நடைபெறும் பண்டாரவன்னியன் நினைவு சதுரங்க மற்றும் பேச்சுப் போட்டி – 2025 தொடர்பான பரிசளிப்பு விழா நேற்று (22/02) முல்லைத்தீவு மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில் நடைபெறவுள்ளது.

குறித்த நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்ததுடன் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசில்கள் மற்றும் சான்றிதழ்களும் வழங்கிக் கௌரவித்தார்.
மாணவர்களின் விவேக சிந்தனை, தன்னம்பிக்கை , தலைமைத் திறன் மற்றும் பொது மேடைப் பேச்சுத் திறனை மேம்படுத்தும் நோக்கில் 2025 ஆம் ஆண்டில் மாவட்ட அளவில் நடத்தப்பட்ட சதுரங்க மற்றும் பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்கள், சான்றிதழ்கள் மற்றும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.
மாவட்டத்தின் கல்வி முன்னேற்றத்தையும், இளைஞர்களின் திறன் மேம்பாட்டையும் வலுப்படுத்தும் இவ்விழாவில் பண்டாரவன்னியன் அவர்களின் வீர வரலாற்றை நினைவுகூரும் வகையிலும், புதிய தலைமுறையினருக்கு தலைமைத்துவ விழிப்புணர்வை ஊக்குவிக்கும் வகையிலும் இந்நிகழ்வு அமைந்திருந்தது.
போட்டியில் வெற்றி பெற்ற முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களிற்கு பணப்பரிசு , வெற்றிக்கிண்ணம் , பதக்கம் , வெற்றிச்சான்றிதழ் என்பன வழங்கப்படதுடன் ஒவ்வொரு பிரிவிலும் 4 தொடக்கம் 10 வரையான இடங்களைப் பெற்றவர்களிற்கு பதக்கங்களும் வெற்றிச்சான்றிதழ்களும் வழங்கப்பட்டன