சாவகச்சேரியில் மோட்டார் சைக்கிள் மதஇலுடன் மோதியதில் இளம்குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த நிலையில்நேற்றையதினம் (செப். 26) உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவத்தில் பாற்பண்ணை வீதி, திருநெல்வேலி பகுதியை சேர்ந்தபாலசேகர் ஹரிபிரசாத் என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறுஉயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இவர் கடந்த செப். 15 அன்று முல்லைத்தீவில் உள்ள ஆலயம் ஒன்றுக்கு குறித்தகுடும்பஸ்தர் நாதஸ்வர கச்சேரிக்கு சென்று செப். 16 வீட்டுக்கு வந்து கொண்டுஇருந்தவேளை சாவகச்சேரியில் உள்ள பாடசாலை ஒன்றின் மதில் மீது மோதிவிபத்துக்குள்ளானார்.இதனையடுத்து காயமடைந்த அவர் யாழ் போதனாவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில்நேற்றையதினம் மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருப்பதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரிநமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டு உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர்சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.