முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் இயற்கை எய்தியுள்ளார்

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் இயற்கை எய்தியுள்ளார்.

நெடுந்தீவினை பிறப்பிடமாகவும் கிளிநொச்சியினை வதிவிடமாகவும் கொண்ட திரு.சுப்ரமணியம் பசுபதிப்பிள்ளை அவர்கள் இன்றைய தினம் (ஒக்டோபர் – 02) கிளிநொச்சியில் இயற்கை எய்தியுள்ளார்.

முன்னாள் வடமாகாண சபை உறுப்பினரும், ஒய்வு பெற்ற கிராம சேவையாளரும் ஆவார். தமிழரசுக் கட்சியின் நீண்டகால உறுப்பினராக செயற்பட்டு வந்தார்.


சமூக அக்கறையும் சமூக சேவையும் தன்னகத்தே கொண்டு செயற்பட்டு வந்ததுடன் நெடுந்தீவில் தமிழரசுக் கட்சியின் செயற்பாட்டிற்கும் அண்மைக்காலமாக பங்காற்றியதுடன் வடமாகண சபையில் உறுப்பினராக இருந்த காலத்தில் சில அபிவிருத்தி திட்டங்களிலும் தனது பங்களிப்பினை வழங்கியிருந்தமை குறிபப்பிடத்தக்கது.

Share this Article