முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க செப்டம்பர் 6ஆம் திகதி விசேட உரையாற்றவுள்ளார்

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 6ஆம் திகதி விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அன்று அவரது கட்சியின் மாநாடும் நடைபெறவுள்ள நிலையில், அந்த தினத்தில் முன்னாள் ஜனாதிபதி உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொது சொத்துக்கள் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ரணில் விக்ரமசிங்க, கடந்த 26ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டார்.

அவரைச் சார்ந்த வைத்திய அறிக்கைகளை பரிசீலித்ததன் பின்னர், கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர இந்த உத்தரவை பிறப்பித்திருந்தார்.

அரச நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில், கடந்த 22ஆம் திகதி குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் அவர் கைது செய்யப்பட்டார்.

அன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

அவரது உடல்நிலை காரணமாக அவர் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், மறுநாளில் வைத்தியர்களின் பரிந்துரையின் பேரில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நேற்று (ஒகஸ்ட் 29) வைத்தியசாலையில் இருந்து வெளியேறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Share this Article