முன்னாள் அமைச்சர் மஹிந்த விஜேசேகர காலமானார் !

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

தென்னிலங்கையின் பிரபல அரசியல்வாதியான முன்னாள் அமைச்சர் மஹிந்த விஜேசேகர இன்று (02/04) காலை தனது 83 ஆவது வயதில் காலமானார்.

மாத்தறை, கொடபிட்டியவில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் காயமடைந்து, நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த நிலையிலேயே அவர் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மஹிந்த விஜேசேகர, முன்னாள் அமைச்சர் கஞ்சன விஜேசேகரவின் தந்தையாவார். 2008 ஆம் ஆண்டில் தபால் மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சராகப் பணியாற்றிய அவர், 2001-2004 காலப்பகுதியில் மீன்பிடி மற்றும் நீரியல் வள அமைச்சராகவும் பதவி வகித்தார்.

இறுதியாக ஐக்கிய தேசியக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றத்திற்குத் தெரிவான அவர், 20 ஆண்டுகளுக்கும் மேலான தனது அரசியல் வாழ்க்கையில் பல அமைச்சுப் பதவிகளை வகித்துள்ளார்.

Share this Article