முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் கலைஞர் கௌரவிப்பு!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

யாழ். மாவட்டத்தின் கலை, கலாசார உயர்ச்சிக்காகவும், மக்களின் கலாசார மேம்பாட்டிற்காகவும் அர்ப்பணிப்போடு சேவையாற்றியமைக்காக கலாபூசணம் விருது பெற்ற வேலாயுதம் நந்தகுமார் – அண்ணாவியாரை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தாவால் பொன்னாடை போர்த்தி, நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

பருத்தித்துறை கற்கோவளம் பகுதியில் பிறந்து வாழ்ந்து தனது பிரதேசத்தில் “வேணுகான சபா மன்றத்தின்” ஊடாக கலை கலாசார பண்பாடுகளை வளர்த்து பாதுகாத்து வந்த அண்ணாவியார் கிராமிய நாடக இசைத்துறையில் இத்துறைசார்ந்த பல தரப்பட்டவர்களால் பல்வேறு விருதுகளை பெற்றுக் கௌரவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Share this Article
Leave a comment