முதலாம் தரத்திற்கு ஏழு பாடசாலைகளிலும் மொத்தம் 45 மாணவர்கள் இணைந்துள்ளனர்.

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

இவ்வருடத்திற்கான முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைக்கும் கால் கோள்விழா சம்பிரதாய முறைப்படி (19 ஏப்ரல்) பாடசாலை முதல்வர்கள் தலைமையில் இடம்பெற்றது.

இவ்வாண்டு ஆகக்கூடிய மாணவர்களை நெடுந்தீவு றோமன் கத்தோலிக்க மகளிர் கல்லூரி இணைத்துக்கொண்டது.

நெடுந்தீவு றோமன் கத்தோலிக்க மகளிர் கல்லூரி 15 மாணவர்களையும், நெடுந்தீவு சீக்கிரியாம் பள்ளம் தமிழ் கலவன் பாடசாலை 11 மாணவர்களையும், மாவிலித்துறை றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை 08 மாணவர்களையும், நெடுந்தீவு மேற்கு ஸ்ரீஸ்கந்தா பாடசாலை 04 மாணவர்களையும், நெடுந்தீவு மேற்கு மங்கையர்கரசி வித்தியாலம் 03 மாணவர்களையும், நெடுந்தீவு கிழக்கு சுப்பிரமணிய வித்தியாலயம் மற்றும் நெடுந்தீவு மேற்கு சைவப்பிரகாசா வித்தியாலயம் ஆகிய 02 மாணவர்களும் இணைந்து கொண்டனர்.

Share this Article