மீனவர்களின் பிள்ளைகளுக்கு நிதியுதவி – கடற்றொழில் அமைச்சர்

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

கடற்றொழில் சமூகத்தைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு ஜனாதிபதி நிதியத்தின்ஊடாக விசேட நிதியுதவிகளை வழங்கவுள்ளதாக கடற்றொழில் அமைச்சர்ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர்இதனை தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதாரத்திற்கும் மக்களுக்கும் புரோட்டீனை வழங்க பாரியளவில்ஒத்துழைப்பு வழங்கும் கடற்றொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் நீண்ட காலமாக பாரியஇன்னல்களுக்கு முகம்கொடுத்து வருகின்றனர்.

சமூக ஒடுக்குதலுக்கும் அவர்கள் உள்ளாகியுள்ளனர். காணாமல் போன, விபத்துக்குள்ளான மற்றும் வெளிநாடுகளில் சிறையிலுள்ள இலங்கைமீனவர்களின் பிள்ளைகளின் கல்வி மற்றும் வாழ்க்கைத் தரத்தை கட்டியெழுப்பும்வகையில் ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக நிவாரணம் வழங்க அரசாங்கம்நடவடிக்கை எடுத்துள்ளதாக கடற்றொழில் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Share this Article