மின்கட்டணத்தைத் தன்னிச்சையாக அரசாங்கம் உயர்த்துமானால், அதற்கு எதிராக அனைத்துத் தொழிற்சங்க நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பு எச்சரித்துள்ளது.
மின்கட்டணம் உயர்த்தப்பட்டால், கட்டணம் செலுத்தாது உள்ள வாடிக்கையாளரின் மின் இணைப்புக்களைத் துண்டிக்கும் நடவடிக்கைகளில் இருந்து விலகிக் கொள்வோம் என்று அந்தத் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்தார்.
கடந்த ஓகஸ்ட் மாதம் 75 சதவீதம் அதிகரிக்கப்பட்ட மின் கட்டணத்தால் மக்கள் பெரும் சிக்கல்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.
இந்தநிலையில், மீண்டும் ஒரு மின் கட்டண அதிகரிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.