நாட்டின் தற்போதைய கொவிட் 19 பரவு நிலை காரணமாக, எமது அழைப்பு சேவை முகவர் நிலையங்களில் மட்டுப்படுத்தப்பட்ட சேவை முகவர்களே கடமையில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் வாடிக்கையாளர்களாகிய உங்களை இலங்கை மின்சார சபையின் சுயபாதுகாப்பு சேவைகளான CEB care செயலி அல்லது ceb.lk எனும் இணையத்தளத்தின் CEB care இணைய வாசலை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
மேலும் உங்கள் மின் தடங்கல் முறைப்பாடுகளை “BD<இடைவெளி>மின் கணக்கு இலக்கம் ” எனும் குறுந்தகவலை 1987 ற்கு அனுப்புவதன் மூலமாகவும் மேற்கொள்ள முடியும்.