By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: மிகக் கன மழை இல்லை – நாகமுத்து பிரதீபராஜா –
Share
Notification
Latest News
யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக ம. பிரதீபன் உத்தியோகபூர்வமாக கடமைகளைபொறுப்பேற்பு!
யாழ்ப்பாணம்
தமிழினப் படுகொலை தொடர்பில் இலங்கையின் பொறுப்புக்கூறலைஉறுதிசெய்யுங்கள்-சிறீதரன் எம்.பி கோரிக்கை!
வன்னிச் செய்திகள்
வேலணை பிரதேச பண்பாட்டு விழா இன்று சிறப்பாக இடம்பெற்றது.
தீவகச் செய்தி
நெடுந்தீவு பிரதேச கலைஞர் கௌரவிப்புக்கான நேர்முகத்தேர்வு!
நெடுந்தீவு
ஈரான் – இஸ்ரோல் இடையே போர் நிறுத்தம் !
உலகச் செய்தி
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > இலங்கைச் செய்தி > மிகக் கன மழை இல்லை – நாகமுத்து பிரதீபராஜா –
இலங்கைச் செய்தி

மிகக் கன மழை இல்லை – நாகமுத்து பிரதீபராஜா –

Last updated: 2024/11/29 at 5:34 AM
Published November 29, 2024 296 Views
Share
3 Min Read
SHARE

28.11.2024 வியாழக்கிழமை இரவு 10.30 மணி வானிலை அவதானிப்பு.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளிலும்பாதிப்பை ஏற்படுத்திய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போதுபருத்தித்துறையின்  கற்கோவளத்திலிருந்து கிழக்காக 430 கி.மீ. தொலைவில்நிலை கொண்டுள்ளது.

இதன் நகர்வு வேகம் மிக மிக குறைவாகவே உள்ளது. இன்று மாலை 6.00 மணியிலிருந்து மணித்தியாலத்திற்கு 1.2 கி.மீ. வேகத்திலேயே நகர்கின்றது. இதேவேகத்தில் நகர்ந்தால் இது கரையைக் கடக்கும் திகதி மாற்றமடையும். இதுவடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து எதிர்வரும் 30.11.2014 அன்றுஇந்தியாவின் புதுச்சேரி அருகே கரையைக் கடக்கும் வாய்ப்புள்ளது.

இதில் வேடிக்கையான விடயம் யாதெனில், தற்போது பருத்தித்துறைக்குகிழக்காக 430 கி.மீ. தொலைவில் உள்ள இதன் மையம், கரையைக் கடக்கும்போது பருத்தித்துறைக்கு வடக்கு வடகிழக்காக 113 கி.மீ. தொலைவில்காணப்படும். ஆகவே இதன் மூலமே இதன் நகர்வு பாதை எத்தன்மைவாய்ந்ததென அறிய முடியும்.

இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் நகர்வு வேகமும் திசையும்  நிச்சயமாக ஆய்வுக்கும் படுத்த வேண்டிய விடயம். ஒரு தாழமுக்கம்/ புயல்/ சூறாவளி தோற்றம் பெற;

1) சமுத்திர மேற்பரப்பின்  சூடான வெப்பநிலை ( Sufficient warm temperature at sea surface )

(2) வளிமண்டல உறுதியற்ற தன்மை (Atmospheric instability)

(3) கொரியோலிசு விசையின் செல்வாக்கு பகுதி (lmpact area of Coriolis force)

(4) வளிமண்டல மாறன் மண்டலத்தின் கீழ் மற்றும் மத்திய பகுதிகளில்காணப்படும் உயர் ஈரப்பதன் (High humidity in the lower to middle levels of the troposphere)

(5) முன்னரே காணப்படும் குறைவளவான குழப்பம்(A pre-existing low-level focus or disturbance)

(6) குத்தான காற்று முறிவு(Vertical wind shear)

என்பன அமைதல் வேண்டும்.

ஆனால் ஒரு தாழமுக்கம்/ புயல்/ சூறாவளி நகர்வதற்கு சில விசைகள்அடிப்படையானவை.

1. அமுக்க சாய்வு விகித விசை ( Pressure Gradient Force)

2. மைய நீக்க விசை(centrifugal force)

3. கொரியோலிசு விசை(Coriolis force)

4. உராய்வு விசை (Frictional Force)

அந்த வகையில் தற்போது உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின்நகர்வினை மைய நீக்க விசை மற்றும் உராய்வு விசை மற்றும் கொரியோலிசுவிசை ஆகியன பாதித்துள்ளன. அதனால் தான் மிக மெதுவாகவும் குழப்பமானதிசை மாற்றங்களுடனும் இது நகர்கின்றது.

இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக நாளையும் நாளைமறுதினமும் (29 மற்றும் 30ம் திகதிகள்) வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின்பல பகுதிகளுக்கும் மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும்வாய்ப்புள்ளது. குறிப்பாக திருகோணமலைக்கும் முல்லைத்தீவுக்கும் இன்றுஇரவும் ஏனைய பகுதிகளுக்கு நாளையும் மழை கிடைக்கும். மிகக் கன மழைஇல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடக்கும் போது வடக்குமற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் காற்றின் வேகம் மணிக்கு 45-55 கி.மீ. வரை வீசும்.

இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடக்கும் வரைகடற்பகுதிகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் மீனவர்கள்கடலுக்கு செல்வதை தவிர்க்கவும்.

You Might Also Like

இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !

சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!

கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கு லைக்கா ஞானம் உபகாரம்!

வாகன இலக்கத் தகடுகளை அச்சிடுவதில் தாமதம்!!

கெஹெலிய குடும்பம் பிணையில் விடுதலை!

கிராமிய வீதிகள் 1000 அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆரம்பம்!

கதிர்காம பாதயாத்திரை காட்டுப்பாதை கிழக்கு மாகாண ஆளுநரால் திறந்து வைப்பு!

டெங்கு ஒழிப்பு வாரம் ஜூன் 30முதல்!

SUB EDITOR November 29, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article நெடுந்தீவில் இருந்து நாளை காலை சமுத்தரதேவா படகு சேவை இடம்பெறும் !
Next Article நெடுந்தீவு குறிகாட்டுவான் இடையிலான கரிகணன் பயணிகள் படகுசேவைஇன்று இடம்பெறும்!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக ம. பிரதீபன் உத்தியோகபூர்வமாக கடமைகளைபொறுப்பேற்பு!
தமிழினப் படுகொலை தொடர்பில் இலங்கையின் பொறுப்புக்கூறலைஉறுதிசெய்யுங்கள்-சிறீதரன் எம்.பி கோரிக்கை!
வேலணை பிரதேச பண்பாட்டு விழா இன்று சிறப்பாக இடம்பெற்றது.
நெடுந்தீவு பிரதேச கலைஞர் கௌரவிப்புக்கான நேர்முகத்தேர்வு!

You Might Also Like

இலங்கைச் செய்தி

இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !

June 23, 2025
இலங்கைச் செய்தி

சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!

June 22, 2025
இலங்கைச் செய்தி

கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கு லைக்கா ஞானம் உபகாரம்!

June 21, 2025
இலங்கைச் செய்தி

வாகன இலக்கத் தகடுகளை அச்சிடுவதில் தாமதம்!!

June 21, 2025
இலங்கைச் செய்தி

கெஹெலிய குடும்பம் பிணையில் விடுதலை!

June 21, 2025
இலங்கைச் செய்தி

கிராமிய வீதிகள் 1000 அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆரம்பம்!

June 21, 2025
இலங்கைச் செய்தி

கதிர்காம பாதயாத்திரை காட்டுப்பாதை கிழக்கு மாகாண ஆளுநரால் திறந்து வைப்பு!

June 20, 2025
இலங்கைச் செய்தி

டெங்கு ஒழிப்பு வாரம் ஜூன் 30முதல்!

June 19, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?