பயங்காரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மட்டக்களப்பு வாழைச்சேனைப் பகுதியினை சேர்ந்த 37 வயதான இணைய ஊடகவியாலளர் முருகப்பிள்ளை கோகுலதாசன் அவர்கள் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இவர் தனது பிரத்தியேக முகப்புத்தகத்தில் மாவீரர் தினத்தினை அனுஷ்டிக்கும் வகையில் பதிவு ஒன்றினை இட்டிருந்தார் எனவும், அதனாலேயே இவர் கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 03 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு பின்னர் நீதி மன்றத்தில் ஆயர்படுத்தப்பட்டு 14நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இவர் கடந்த 29ம் திகதி கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.