மார்பகப் புற்றுநோய்க்கான உலகளாவிய விழிப்புணர்வை முன்னிட்டு, நாளை (ஒக். 22) பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் இளஞ்சிவப்பு நிற ஆடைகளை அணிந்து சபை நடவடிக்கைகளில் பங்கேற்க தீர்மானித்துள்ளனர்.
இது தொடர்பாக சபாநாயகர் இன்று (ஒக். 21) அனுமதி வழங்கியுள்ளார். இதன் அடிப்படையில், நாளைய பாராளுமன்ற அமர்விற்கு வரும்போது, குறித்த அறிவிப்பின்படி உறுப்பினர்கள் செயல்படுமாறு சபாநாயகர் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வை குறிக்கும் சின்னத்தை பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் சங்கம் தயாரித்துள்ளதாகவும், அது அனைத்து உறுப்பினர்களுக்கும் வழங்கப்படும் எனவும் சபாநாயகர் தெரிவித்தார்.