மாமன் மருமகனுக்கு இடையில் ஏற்பட்ட தகராறு : ஆபத்தான நிலையில் மருமகன் வைத்தியசாலையில் அனுமதி !

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

மாமன் மருமகனுக்கு இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக ஆபத்தானநிலையில் மருமகன்!!

மாமன் மருமகனுக்கு இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக பாரியஇரும்பினால் தாக்கப்பட்டதில் மருமகன் படுகாயம் அடைந்த நிலையில்கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுஅங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனைவைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்றுமுன்தினம்(செப். 23) இரவு திங்கட்கிழமை பெரியகுளம்பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் கிளிநொச்சி கல்மடு பகுதியைச்சேர்ந்த பூபாலசிங்கம் ஐங்கரன் என்னும் 32 வயதுடைய இளைஞனே படுகாயம்அடைந்து ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய மாமனார் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம்தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்

Share this Article