நேற்று(ஜூன் 25) நடைபெற்ற மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய தர்மகர்த்தா சபைத் தேர்தலில் வழிபடுவோர் சங்க அங்கத்தவர்கள் 1062 பேர் வாக்களித்திருந்தனர்.
வாக்குச் சீட்டுக் கணக்கெடுப்பு முடிவில் 14 வேட்பாளர்களில் பின்வரும் 7 பேர் தர்மகர்த்தா சபை உறுப்பினர்களாக தெரிவுசெய்யப்பட்டனர்.
1.திரு.நிரூபன் புவனேந்திரன்
2.திரு.பிரதீபன் துரைரட்ணம்
3.திரு.பிரதீபன் திவ்வியமனோகரன்
4.திரு.வரதராசா கந்தையா
5.திரு.அருந்தவநாதன் குமாரசிங்கம்
6.திரு.சிதம்பரநாதன் நடராசா
7.திரு.தர்பாகரன் தம்பிராசா
இந்தத் தேர்தலை நடாத்துவதற்கு மல்லாக மாவட்ட நீதிமன்ற பதிவாளர், மானிப்பாய் பொலிஸ் பொறுப்பதிகாரி , பொலிஸ் உத்தியோகத்தர்கள், இந்து குருமார் ஒன்றியப் பிரதிநிதி, ஆலய குருக்கள், மானிப்பாய் மெமோறியல் பாடசாலை சமூகத்தினர், மற்றும் சண்டலிப்பாய் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஒத்துழைப்பு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.