மானிப்பாயில் அதிகளவான மாத்திரைகளை உட்கொண்ட பெண் ஒருவர் நேற்று(ஒக்.10) அதிகாலை உயிரிழந்துள்ளார்.
மானிப்பாய் – சாத்தாவத்தை பகுதியை சேர்ந்த பாலசுந்தரம் சிந்தாத்துரைமேரி(வயது 69) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
குறித்த பெண் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் தெல்லிப்பளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அங்கு கொடுத்தமாத்திரைகளை அளவுக்கு அதிகமாக வீட்டில் வைத்து உட்கொண்டுள்ளார்.
இந்நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காகசேர்ப்பிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று (ஒக்.10) அதிகாலைஉயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான திடீர் மரண விசாரணை மற்றும் உடற்கூற்றுப் பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.