மலேசியாவில் நடைபெற்ற ‘சம்பந்தன் பைந்தமிழ்ச் சுடர் 5.0’ சர்வதேச தமிழ் விவாதப் போட்டியில், இலங்கை தேசிய தமிழ் விவாத மேம்பாட்டுக் குழு சாம்பியன் பட்டம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது
இந்தத் தொடரின் வரலாற்றில் மலேசியாவைச் சேராத ஒரு நாடு சாம்பியன் பட்டம் வெல்வது இதுவே முதல் முறையாகும்.
வெற்றி வாகை சூடிய வீரர்கள்..
ஹரீஷ் ஜெயரூபன் – கொழும்பு றோயல் கல்லூரி (தலைவர்)
மைக்கேல் ஜெனுஷன் – யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி
சிவாசினி பிரதீபன் – பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலை
லக்ஷ்மிதா சிவ சங்கரன் – திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி
வெற்றி பெற்ற மாணவர்களை மலேசியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ரிஸ்வி அவர்கள் நேரில் அழைத்து பாராட்டியதோடு, இலங்கை – மலேசியா இடையிலான கலாச்சார மற்றும் கல்விசார் உறவுகள் குறித்து கலந்துரையாடினார்.
இந்த வெற்றியானது சர்வதேசத் தமிழ் விவாத மேடைகளில் இலங்கை ஒரு பலமான சக்தியாக உருவெடுத்துள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது