மறு அறிவித்தல் வரை தபாலக ஊழியர்களின் விடுமுறை இரத்துச்செய்யப்படுவதாக அஞ்சல் மா அதிபர் அறிவித்துள்ளார்.
தபால் ஊழியர்கள் (12} திகதி நள்ளிரவு 12 மணி தொடக்கம் 13 ஆம் திகதிநள்ளிரவு 12 மணி வரை சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடதீர்மானித்துள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணிதெரிவித்திருந்தது.
இந்நிலையில், இவ்வாறு விடுமுறை இரத்துச்செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அஞ்சல் துறை தற்போது பெரும் நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில், சுமார்6000 பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளதால், 4 ஆண்டுகளாக பதவி உயர்வுமற்றும் ஆட்சேர்ப்பு இடம்பெறவில்லை எனவும் பணிப்புறக்கணிப்பைமுன்னெடுக்க தீர்மானித்திருந்தனர்.
இதேவேளை, கடிதம் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளமையால் அதிகமானகடிதங்கள் பிரதான தபால் நிலையங்களில் தேங்கியுள்ளதாகதெரிவிக்கப்படுகின்றது.