மருதங்கேணியில் வன்முறைக் குழு அட்டகாசம் – பல உடைமைகள் சேதம்!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு கிழக்கு பகுதியில் வன்முறைக்குழு ஒன்று அட்டகாசம் செய்துள்ளது.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

கைக் குழந்தைகளுடன் வீட்டில் இருந்த குடும்பத்தினர் மீது தாக்குதல் மேற்கொள்ளும் முயற்சியில் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.

வாள்கள், கத்தி, கற்களுடன் வருகை தந்த ஒரு குழுவினால் கட்டைக்காடு கிழக்கு பகுதியில் இந்த தாக்குதல் சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலின் போது வீட்டில் காணப்பட்ட உழவியந்திரம், வாகனம் வீட்டின் பொருட்கள் கதவுகள் சேதமாக்கப்பட்டுள்ளது.

இந்த வன்முறைக் குழுவினர் கட்டைக்காடு கிழக்கு பகுதியில் மதுபோதையில் நீண்ட நாட்களாக குடும்பங்களை அச்சுறுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

பாதிக்கப்பட்ட குடும்பஸ்தர் மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மருதங்கேணி பொலிசார்  ஆரம்பித்துள்ளதுடன் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பலருக்கு எதிராக மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் அதிகளவான முறைப்பாடுகள் காணப்படுகின்ற வேளையிலும் பொலிசார் இவர்களை கைது செய்ய தயங்குவதாக பாதிக்கப்பட்ட குடும்பஸ்தர் தெரிவித்துள்ளார்.

Share this Article