மருதங்கேணியில் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் விசேட நடமாடும் சேவை!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

மருதங்கேணி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பொதுமக்களுக்காக “விசேட நடமாடும் சேவை” ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் சேவைகளை பொதுமக்களுக்கு நேரடியாகவும் எளிதாகவும் வழங்கும் நோக்கில், இந்த விசேட நடமாடும் சேவை எதிர்வரும் 11ஆம் திகதி காலை 9.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த சேவையின் மூலம் பொதுமக்கள் கீழ்வரும் சேவைகளைப் பெற முடியும்:

வாகன அனுமதிப்பத்திரம் வழங்கல்

வாகன உடமை மாற்ற சேவை

வாகன பரிசோதகர்  அறிக்கை வழங்கல்

வாகன புகைப் பரிசோதனை அறிக்கை வழங்கல்

இணைய வாகன அனுமதிப்பத்திரம்

குறித்த சேவைகளைப் பெற விரும்பும் பொதுமக்கள், தேவையான ஆவணங்களுடன் குறிப்பிட்ட நேரத்திற்குள் வருகை தருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Share this Article