சுப்பிரமணியம் கணேசலிங்கம்
(அகில இலங்கை சமாதான நீதிவான்
ஓய்வுநிலை தபாலக உத்தியோகத்தர்
நெடுந்தீவு ப.நோ.கூ.சங்க முன்னாள் தலைவர்)
யாழ். நெடுந்தீவு மத்தியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் வவுனியா பெரியதம்பனையைத் தற்காலிக வதிவிடமாகவும் கொண்டவருமான சுப்பிரமணியம் கணேசலிங்கம் அவர்கள் 02.03.2023 வியாழக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் பொன்னம்மா தம்பதிகளின் செல்வப் புதல்வனும், காலஞ்சென்ற சின்னத்துரை நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், விஜயாம்பிகையின் பாசமிகு கணவரும், அகிலன் (கனடா), தயாளன், மாறன் (கனடா), சாம்பவி (அமெரிக்கா), அனுசன் ஆகியோரின் அன்புமிகு தந்தையும் தனுஷா (கனடா), ஜெமிலா, கீர்த்தனா (கனடா), செல்வரட்ணம் (அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மாமனும், சபாநாயகி, தியாகலிங்கம் (நோர்வே), புண்ணியலிங்கம், கலாநாயகி, குலநாயகி, செந்தில்நாயகி ஆகியோரின் பாசமிகு சகோதாரனும், அமிர்தாம்பிகை, மோகனதாஸ் (கனடா), காலஞ்சென்ற கோசலாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும், காவியா, அக்க்ஷயா, சாகித்தியா ஆகியோரின் அன்புமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் இல.43, பெரியதம்பனை இல்லத்தில் வைக்கப்பட்டு இறுதிக்கிரியைகள் 09.03.2023 வியாழக்கிழமை அன்று மு.ப. 11.00 மணியளவில் ஆரம்பமாகித் தொடர்ந்து தகனக் கிரியைக்காக பெரியதம்பனை கற்குழி இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்.