மரண அறிவித்தல் -திருமதி லீலிமலர் சின்னப்புநாயகம் (ஓய்வுபெற்ற பிரதம தாதி உத்தியோகத்தர்)

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

 

திருமதி லீலிமலர் சின்னப்புநாயகம்

(ஓய்வுபெற்ற பிரதம தாதி உத்தியோகத்தர்)

நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும் இல.42. கணேசபுரம் கிளிநொச்சியை வதிவிடமாகவும் கொண்ட திருமதி லீலிமலர் சின்னப்பு நாயகம் கடந்த (20.09.2023) புதன்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சாமிநாதர் (பூதர்) எலிசெபத் தம்பதியரின் மூத்த புதல்வியும். காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை சின்னக்குட்டி தம்பதியரின் மூத்த மருமகளும், காலஞ்சென்ற சின்னப்புநாயகம் அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற தவமலர் மற்றும் வில்லியம் (கனடா), வைத்திய கலாநிதி செல்வரட்ணம் (அமெரிக்கா) காலஞ்சென்ற நவக்குமார் மற்றும் அற்புதமலர் (கணேசபுரம்), அரியம் (லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும். கனகலட்சுமி (கனடா), கீதாஞ்சலி (அமெரிக்கா), சந்தானம் (பிரான்ஸ்), சண்முகப்பிரியா (லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியும், காலஞ்சென்றவர்களான அல்பிரேட் சின்னமலர் மற்றும் அருட்சகோதரி யோசேப்பா அகியோரின் பாசமிகு சகோதரியும், மரியபாக்கியம், பூராசா ஆகியோரின் அன்புமைத்துனியும், ஜான்சி,சுரேஸ்,டயானா, பிரியங்கா, கஜன், அருண்,மிதுன், ஹரி, பிரசாத், அஸ்வினி, ஆன்சி, அன்ரூ ஆகியோரின் பாசமிகு பேத்தியும், மார்வின், டானிக்கா, ஜேவின், ஜெக்கப், ஜெனிசன், தக்ஷயா, காய் ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (23.09.2023) சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு சடங்குத்திருப்பலி இல: 42 கணேசபுரம் கிளிநொச்சியில் அமைந்துள்ள இல்லத்தில் நடைபெற்று, நாளைமறுதினம் (24.09.2023) ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு கிளிநொச்சி புனித திரேசாள் தேவாலயத்தில் ஆராதனை நடைபெற்று, திருநகர் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

Share this Article