வளிமண்டல திணைக்களத்தினால் வழங்கப் பட்ட அறிவுறுத்தல்களுக்கு அமைய எதிர்வரும் 22 ஆம் திகதி சனிக்கிழமை (நாளைய தினம்) தென் கிழக்கு வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழமுக்கம் ஒன்று உருவாவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும், ஏற்படுகின்ற அனர்த்தங்கள் குறித்து மக்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும் என மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவி பணிப்பாளர் கே.திலீபன் தெரிவித்துள்ளார்
023-2117117 மற்றும் 023-2250133 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் அனர்த்த முகாமைத்துவ மாவட்ட உதவி பணிப்பாளர் தொலைபேசி இலக்கம் 077-2320529 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு அனர்த்தம் தொடர்பான தகவல்களை வழங்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.