மன்னார் நானாட்டானில் 2 சடலங்கள் கரையொதுங்கி உள்ளது

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

மன்னார் நானாட்டான் பிரதேச செயலக பிரிவிற்கு   உட்பட்ட அருவி ஆற்றை அண்டிய அறுவை குன்று  பகுதியில் 2 ஆண்களின் சடலங்கள் இன்றைய தினம் (30/11) கரை ஒதுங்கியுள்ளது  என்று தெரிவிக்கப்பட்டது சடலங்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை

நாட்டில் ஏற்பட்ட புயல் மழை வெள்ளப்பெருக்கு காரணமாக உயிரிழந்தவர்களின் சடலமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது

குறித்த சடலங்கள்  நாட்டானிலிருந்து அரிப்பு துறை செல்லும் பிரதான வீதியில் வேலியோரங்களில் அடைப்பட்டு கிடந்ததை  அறுவை குன்று பகுதியில் வெள்ளத்தில் சிக்கியிருந்து உயிர் தப்பி அவ்வழியால் வந்த சிலர் இன்றைய தினம் அவதானித்துள்ளனர்

குறித்த சம்பவம் தொடர்பாக  முருங்கன்  போலீசாருக்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து குறித்த சடலங்களை  மீட்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது அவ்விடத்தில் நீரின் இழுவை அதிகமாக இருப்பதால் சடலங்கள் மீட்கப்படாமல்  தாமதமாவதாகவும் தெரிவிக்கப்பட்டது

Share this Article