மன்னார் – பட்டித்தோட்டத்தில் உள்ள ஆயர் இல்லத்தில் கட்டிட பணியில் இருந்த புத்தளம் – கட்டுநேரியை சேர்ந்த ஒருவருக்கு நேற்று (08) இரவு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கட்டிட பணியில் ஈடுபட்ட குறித்த நபர் காய்ச்சல் மற்றும் இருமல் காரணமாக நேற்று முந்தினம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்குச் சென்ற குறித்த நபருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியானது.
இவருடன் கட்டிட நிர்மான பணியில் இருந்த 32 பேர், அவருடன் வந்த 3 பேர் உட்பட 35 உடனடியாக அந்த பகுதிகளிலேயே சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் டி.வினோதன் தெரிவித்தார்.