1986 ஆம் ஆண்டு ஜூன் 10ஆம் திகதி மண்டைதீவு கடலில் உயிரிழந்த ஈ.பி.ஆர்.எல்.எப். உறுப்பினர்கள் மற்றும் குருநகர் பகுதிக்குட்பட்ட 32 கடற்றொழிலாளர்களின் நினைவாக, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இன்று (ஜூன் 10) அஞ்சலி செலுத்தினார்.
நினைவாக அமைக்கப்பட்ட இடத்திற்கு சென்று மலர் தூவி, மெழுகுவர்த்தி ஏற்றி, அவர் மரியாதை செலுத்தியதோடு, உயிரிழந்தவர்களின் தியாகங்களை நினைவுகூரும் நிகழ்வாக இது அமைந்தது.