வேலணைப் பிரதேச செயலகப் பிாிவிற்குட்பட்ட மண்டதீவுப் பிரதேசத்தில் இன்றைய தினம் (ஜனவாி 18) பொது மக்களது காணியினை கடற்படையினாின் தேவைக்கு அபகாிக்கும் நோக்குடன் அளவீடு செய்ய சென்ற சமயம் பொதுமக்மகள் நடாத்திய போரட்டத்தின் பயனாக தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டது.
காணி அளவீடு செய்யப்போகிறாா்கள் என தகவல் கிடைத்ததும் இன்று காலையில் பொதுமக்களும் அரசியலி பிரமுகா்களும் ஒன்று திரண்டனா்.
இச்சம்பவத்தினை அறிந்த வேலணைப் பிரதேச செயலாளா் அவா்கள் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களுடன் சமரசப் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்ட போதும் போரட்டத்தில் ஈடுபட்டவா்கள் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை.
பொதுமக்களுடன் அரசியல் பிரமுகா்களான நடாளுமன்ற உறுப்பினா்களான செல்லராச கஜேந்திரன், சிவஞானம் சிறிதரன் முன்னாள் நடாளுமன்ற உறுப்பினா் சரவணபவான், வடமாகாண சபை முன்னாள் உறுப்பினா்களான விந்தன் கனகரட்ணம், எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் உள்ளுராட்சி பிரதேச சபை உறுப்பினா்கள் என பலரும் இப் போரட்டத்தில் பங்கு பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.