மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஶ்ரீநேசன் இன்று (செப் 14) இடம்பெற்ற விபத்தில் காயமடைந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அம்பாறையில் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் கூட்டத்தில் பங்கேற்று மட்டக்களப்புக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது, அவர் பயணித்த வாகனம் மற்றொரு காருடன் மோதி விபத்துக்குள்ளானது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்விபத்து மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது.
காயமடைந்த ஶ்ரீநேசன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.