மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மருத்துவ வரலாற்றில் ஒரு சூழில்நான்கு குழந்தைகளை ஆரோக்கியமான முறையில் தாய் ஒருவர் பிரசவித்துள்ளசம்பவம் இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு – புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த ஹரிகரன் கிருஸ்ணவேணிஎன்னும் தாயே இந்த குழந்தைகளை பிரசவித்துள்ளார்.
மருத்துவத்துறையின் வரலாற்றில் இயற்கை முறையில் இவ்வாறுகருத்தரிப்பதானது அரிதான விடயமாகவே இருப்பதாக மட்டக்களப்பு போதனாவைத்தியசாலையின் மகப்பேற்று வைத்திய நிபுணர் சரவணன் தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகவியலாளர்களை தெளிவுபடுத்தும் வகையான சந்திப்புநேற்று (மே22) மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நடைபெற்றது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் க.கலாரஞ்சினி, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்திய நிபுணர்சரவணன், குழந்தை நல வைத்திய நிபுணர் ரி.மதன் ஆகியோர் இங்கு கருத்துதெரிவித்தனர்.
இதன்போது சுகப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகள் கொண்டுவரப்பட்டுஊடகவியலாளர்களுக்கு காண்பிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர்பெ.மைதிலி உட்பட வைத்தியர்கள், தாதியர்கள் கலந்துகொண்டனர்.
இந்த நிலையில் இயற்கையான கருத்தரித்து சுகப்பிரசவமாக நான்குகுழந்தைகளை இந்த தாய் பிரசவித்தமையானது மருத்துவ துறையில் மிகவும்அரிதான விடயமாக பார்க்கப்படுவதாக மட்டக்களப்பு போதனாவைத்தியசாலையின் மகப்பேற்று வைத்திய நிபுணர் சரவணன் தெரிவித்தார்.
பிறந்த நான்கு குழந்தைகளும் மிகவும் தேக ஆரோக்கியத்துடன் உள்ளதாகவும்இதனை அரிதான குழந்தை பிறப்பாக கருதுவதாகவும் மட்டக்களப்பு போதனாவைத்தியசாலையின் பணிப்பாளர் க.கலாரஞ்சினி தெரிவித்தார்.
இதேநேரம் தமது பிரசவத்திற்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில்அனுமதிக்கப்பட்ட போது தமக்கு சகல வழிகளிலும் உதவியவர்களுக்கு நான்குபிள்ளைகளை பிரசவித்த தாயார் இதன்போது நன்றி தெரிவித்தார்.
இதற்கு முன்னர் 2017 ஆம் ஆண்டிலும் அம்பாறை பொத்துவிலைச் சேர்ந்த 35 வயதான ஐ.விஜித்தாகுமாரி என்ற தாய் மட்டக்களப்பு போதனாவைத்தியசாலையில் வைத்து நான்கு குழந்தைகளை பெற்றெடுத்தமைகுறிப்பிடத்தக்கது.