தமிழ் அரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட மகளீர் அணியால் பல்கலைக்கழகம் தெரிவான 9 மாணவர்களுக்கு மடிக்கணனி வழங்கி வைப்பு!
திருநெல்வேலி பத்திரகாளி உதவும் கரங்கள் நிறுவனத்தின் நிதிப்பங்களிப்புடன் 2020 ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்திற்கு தெரிவான யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களை சேர்ந்த பொருளாதாரத்தில் பலயீனமான குடும்பங்களை சேர்ந்த 9 மாணவர்களுக்கு இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட மகளீர் அணியினால் மடிக்கணனி வழங்கி வைக்கப்பட்டது.
பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களின் வழிகாட்டலில் குறித்த செயற்திட்டம் மூலம் ஒவ்வொரு மாணவர்களுக்கும் 96,500/- ரூபாய் பெறுமதியான 9 மடிக்கணனிகள் வழங்கி வைக்கப்பட்டது. அத்தோடு குறித்த மாணவர்களின் பல்கலைக்காலம் முழுவதும் கற்பதற்கான செலவுகளை, மடிக்கணனிக்கு பண உதவி செய்த புலம்பெயர் தேசங்களில் இருக்கும் எமது உறவுகளே பொறுப்பேற்றிருக்கின்றார்கள்.