மகனை கடந்த பன்னிரண்டு வருடங்களாக தேடி அலைந்த தாய், அவரை காணாமலேயே உயிரிழந்துள்ளா

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை கடந்த பன்னிரண்டு வருடங்களாக தேடி அலைந்த தாய், அவரை காணாமலேயே உயிரிழந்துள்ளார்.

கடந்த 2009 இறுதிப் போரில் முள்ளிவாய்க்காலில் காணாமல் ஆக்கப்பட்ட  அவரது மகனான செஞ்சுடர் மாஸ்டர் என்பவரையே இதுவரை காலமும் தேடி வந்த நிலையில், புற்றுநோயினால் இன்று (திங்கட்கிழமை) உயிரிழந்துள்ளார்.

வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் ஊடகப்பேச்சாளரும் அ.ஈழம் சேகுவேராவின் தாயாரும் ஆகிய தேவகிஅம்மா என்பவரே குறித்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்ட தனது மகன் விடயத்தில் உரிய நீதி கிடைக்காத நிலையில் உயிரிழந்துள்ள குறித்த தாயாருக்கு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் வவுனியா சங்கத்தினர், தமது இரங்கல் அஞ்சலிகளை தெரிவித்துள்ளனர்.

Share this Article