போலி முகநூல் கணக்குகளை அகற்றுமாறு கோரி நாளென்றுக்கு சுமார் 200 முறைப்பாடுகள் கிடைக்கப் பெறுவதாகக் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின்பிரதிப் பணிப்பாளர் தர்ஷிகா குமாரி ஜயசிங்க அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த அவர், போலிமுகநூல் கணக்குகளை அகற்றுமாறு கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளின்எண்ணிக்கை அதிகரித்து வருவதால் இதற்கு முன்னர் கிடைக்கப்பெற்றமுறைப்பாடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்பது தொடர்பில்சரியாக கண்டறிய முடியவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.