போலி அனுமதிப்பத்திரங்களை தயாரித்து மணல் கடத்தலில் ஈடுபட்டகுற்றச்சாட்டில் இருவர் சாவகச்சேரி பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் , கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டிப்பர் வாகனமும்பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சாவகச்சேரி பொலிஸார் , யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலையில் புத்தூர்சந்தியை அண்மித்த பகுதியில் வீதி சோதனை நடவடிக்கையில்ஈடுபட்டிருந்தனர்.
அதன் போது , வீதியில் பயணித்த இரண்டு டிப்பர் வாகனங்களை வழிமறித்துசோதனை செய்தனர். அதன் போது வாகனத்தினுள் ஆற்று மணல்காணப்பட்டுள்ளது. அது தொடர்பில் சாரதிகளிடம் விசாரணைகளைமேற்கொண்ட வேளை , மணல் எடுத்து செல்வதற்கு வழங்கப்பட்டதாக அனுமதிபத்திரம் ஒன்றினை சாரதிகள் பொலிசாரிடம் கையளித்துள்ளனர்.
அவற்றினை பொலிஸார் சோதனை செய்த போது , அவை போலியான அனுமதிபத்திரம் என்பதனை பொலிஸார் கண்டறிந்து , மணல் கடத்தி சென்றகுற்றச்சாட்டில் இரு சாரதிகளையும் கைது செய்தனர்.
அதேவேளை மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டிப்பர் வாகனத்தினையும்பறிமுதல் செய்து பொலிஸ் நிலையம் எடுத்து சென்றனர்.