கடந்த போர்க் காலத்தில் உங்கள் பாடசாலை வாழ்க்கை அனுபவங்கள், கற்றல்கற்பித்தல் முறைமைகள், கல்வியல் வாழ்வு முறைகள் தொடர்பில் கட்டுரை, கவிதை மற்றும் அனுபவப் பகிர்வாக எழுத அழைக்கின்றனர் சிறகுகள் அமையத்தினர்.
எமது வாழ்வியலினை ஆவணப்படுத்த சிறகுகள் அமையம் எடுக்கும் ஒரு முயற்சிஎன்பதுடன் அனைவரினதும் கூட்டுழைப்புடன் இதனை வரலாற்று ஆவண நூலாகஉருவாக்கும் முயற்சிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.