பொலித்தீனுக்கு மாற்றாக துணிப்பைகள்: ஊர்காவற்றுறை பிரதேச சபையின் முன்மாதிரி செயற்றிட்டம்

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

ஊர்காவற்றுறை பிரதேச சபையால் ஜனவரி முதலாம் திகதி முதல்பொலித்தீன் பாவனைக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் முன்மாதிரி செயற்பாடாக மக்கள் பொலித்தீன் பைகளுக்கு மாற்றீடாக பயன்படுத்தும் வகையில் உக்கக்கூடிய துணிப்பைகள் அறிமுகம் செய்யப்பட்டு பொதுமக்களுக்கு இலவசமாக விநியோகிக்கப்பட்டுள்ளது.

‘சூழலை நேசிப்போம் எம் சந்ததியை காப்போம்’ என்ற தொனிப்பொருளில் தைப்பொங்கல் தினத்தில் துணிப் பைகளை அறிமுகம்செய்யும் நிகழ்வு புளியங்கூடல் ரட்ணம் பவுண்டேசன் மண்டபத்தில் இடம்பெற்றது.

குறித்த செயற்றிட்டத்துக்கு புளியங்கூடல் ரட்ணம் பவுண்டேசன் நிறுவனம் முழுமையான அனுசரணையினை வழங்கி ஊர்காவற்றுறை பிரதேச சபையூடாக பிரதேச மக்கள் மற்றும் நிறுவனங்களுக்கு நீண்டகாலம் பயன்படுத்தக்கூடியதும் உக்கக்கூடிய துமான துணிப்பைகளை விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது.

ஊர்காவற்றுறை பிரதேச சபையின் இந்த முன்மாதிரியான செயற்றிட்டத்திற்கு சூழலியலாளர்கள் மற்றும் பொது மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.

Share this Article