பெளத்த மத வாதத்தின் ஊடாக அரசியல் செய்யும் அநுர – சாணக்கியன் சாடல்

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

பெளத்த மத வாதத்தின் ஊடாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அரசியல்செய்கிறார் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார்.

கடந்த ஆட்சியில் மகிந்த மற்றும் அவரது சகாக்கள் விகாரைகள் மற்றும் புத்தபிக்குகளிடம் சரணடையும் போது, குண்டர்கள் தங்கள் பிழைகளை மறைக்க ஓடிஒளிக்கும் இடம்தான் இவ்வாறான மதஸ்தானங்கள் என்று தற்போதையஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கூறியிருந்தார்.

ஆனால் அவர் தற்போது புத்தரின் புனித சின்னங்களை காட்சிப்படுத்தும் முக்கியநிகழ்வுகளில் முன்னிலை வகிக்கின்றார். ஆனால் எமது நாட்டின் முக்கியபிரச்சினைகளை மூடி மறைப்பதில் ஜனாதிபதி அநுர தற்போது கவனம்செலுத்துகின்றார் .

இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு ஏறாவூர் நகர சபையில்போட்டியிடும் வேட்பாளர்களுக்கான அறிமுக கூட்டமும் மற்றும் தேர்தல் பிரச்சாரகூட்டமும் கடந்த வெள்ளிக்கிழமை (ஏப்ரல்18) நடைபெற்றபோது அங்குஉரையாற்றுகையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன்மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Share this Article