தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்ததின்படி, இவ்வாண்டின் பெப்ரவரி மாதம் முதலாம் திகதியன்று 18 வயது நிறைவடைந்தவர்கள், எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வாக்களிக்க முடியும்.
அதன்படி, 2007 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் பிறந்தவர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்கத் தகுதியுடையவர்களாக கருதப்படுவார்கள்.
மேலும், வேட்பாளர் நியமனத்திற்கான வழிகாட்டுதல்களையும் தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
இதன்படி, 25% அல்லது அதற்கு அதிகமான இளைஞர் பிரதிநிதித்துவம், பாலின ஒதுக்கீடுகள், மற்றும் பிரதேச மட்டத்தில் குறைந்தது 25% பெண் வேட்பாளர்களும், விகிதாசாரப் பட்டியலில் 50% பெண்களும் இடம்பெற வேண்டும் என்பதற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.