பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட மீனவர்களுக்கான உயிர் காப்பு அங்கிகள் பூநகரி கடற்தொழிலாளர்கள் சங்கங்களின் சமாசத்திடம் நேற்றைய தினம் (24/12) கையளிக்கப்பட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ், பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட பதினாறு கடற்தொழிலாளர் சங்கங்களினை சேர்ந்த 584 மீனவர்களுக்கு இரண்டு மில்லியன் ரூபா பெறுமதியான உயிர் காப்பு அங்கிகள் நேற்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களால் பூநகரி கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்திடம் கையளிக்கப்பட்டது.
பூநகரி கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தில் நடைபெற்ற குறித்த நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், பூநகரி பிரதேச செயலாளர், பூநகரி பிரதேச சபையின் தவிசாளர் சிறீரஞ்சன், பூநகரி பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர்கள், கடற்தொழிலாளர் சங்கங்களினுடைய பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.