2024 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப் பரீட்சை பெறுபேறுகள்தொடர்பான மேன்முறையீடுகளை இணையவழி ஊடாக சமர்ப்பிக்குமாறுபரீட்சைகள் திணைக்களம் கோரியுள்ளது.
அதன்படி, எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 6ஆம் திகதி வரைஇதற்கான காலம் ஒதுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர பரீட்சையின் பெறுபேறுகள் நேற்றுவெளியாகின.
அதற்கமைய, குறித்த பெறுபேறுகளை www.doenets.lk என்றஇணையத்தளத்திற்கு பிரவேசித்து பார்வையிட முடியும்.
புலமைப் பரிசிலை பெற்றுக் கொள்வதற்காக விண்ணப்பிக்க கூடியவர்கள்20,000 என்பதுடன், விசேட தேவையுடைய 250 விண்ணப்பதாரிகள் ஏலவேதெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
பாடசாலை அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ள, பயனர் பெயர் மற்றும் கடவுச் சொல்என்பவற்றைக் கொண்டு, பாடசாலை பரீட்சை பெறுபேறு ஆவணத்தைதரவிறக்கம் செய்துக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான மாவட்ட ரீதியானவெட்டுப்புள்ளி விபரங்கள் வெளியாகியுள்ளன.
இதற்கமைய, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தளை கேகாலை, காலி, மாத்தறை, மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களில் உள்ள தமிழ்மொழிமூல பாடசாலைகளுக்கு 141 என்ற வெட்டுப்புள்ளி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், நுவரெலியா, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, மட்டக்களப்பு, அம்பாறை, பதுளை மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களுக்கானவெட்டுப்புள்ளி 139 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மன்னார், முல்லைத்தீவு, திருகோணமலை, புத்தளம், மொனராகலை, அநுராதபுரம், மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் உள்ள தமிழ்மொழிமூல பாடசாலைகளுக்கு 138 என்ற வெட்டுப்புள்ளி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, இரத்தினபுரி மாவட்டத்தல் உள்ள தமிழ் மொழிமூலபாடசாலைகளுக்கான வெட்டுபுள்ளி 143 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகஇலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த வருடம் இடம்பெற்ற ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சை சமூகத்தில்அதிகளவில் பேசுப்; பொருளாக காணப்பட்டது.
குறித்த பரீட்சையின் பகுதி ஒன்று வினாத்தாளின் 3 வினாக்கள் கசிந்தமையேஇதற்கு பிரதான காரணமாகும்.
இதனையடுத்து பெற்றோர்கள் குறித்த சம்பவத்திற்கு எதிர்ப்பு வெளியிட்டதுடன், அந்த சம்பவத்துடன், தொடர்புடைய மேலதிக வகுப்பு ஆசிரியர் ஒருவர் உள்ளிட்டஇரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
அதேநேரம், குறித்த சம்பவம் தொடர்பில் உயர்நீதிமன்றில் வழக்கு தாக்கல்செய்யப்பட்டது.
இதனையடுத்து குறித்த சம்பவத்தின் உண்மைத் தன்மையை அறியஉயர்நீதிமன்றினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் பரிந்துரைகளின்அடிப்படையில் நடவடிக்கை எடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்தநிலையில், பரீட்சைகள் திணைக்களம் குறித்த பரிந்துரைகளுக்கு அமையசெயற்பட்டு பரீட்சை பெறுபேறுகளை வெளியிட்டுள்ளது.