புலமைப்பரிசில் பரீட்சை கேள்விகளை கசியவிட்ட இருவரும் விளக்கமறியலில் !

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

இவ்வருடம் இடம்பெற்ற ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் சிலகேள்விகளை கசியவிட்டதாக கூறப்படும் மஹரகம தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் மற்றும் பாடசாலை ஆசிரியரும் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அவர்கள் இன்று (ஒக். 07) கடுவலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

புலமைப்பரிசில் பரீட்சையின் சில கேள்விகளை வெளியாட்களுக்குவழங்கியதாக சந்தேகநபர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Share this Article