புத்தளத்தில் எரியூட்டப்படவுள்ள 500 கிலோ கிராம் ஹெரோயின்!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நாட்டில் பல்வேறு சந்தர்ப்பங்களில் கைப்பற்றப்பட்ட சுமார் 500 கிலோஹெரோயின் போதைப்பொருட்கள், எதிர்வரும் திங்கட்கிழமையன்று (ஏப்ரல்28) புத்தளத்தில் எரியூட்டப்படும் என்று பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

நீதிமன்ற சாட்சியமாக வைக்கப்பட்டிருந்த மொத்தம் 494.48 கிலோஹெரோயின் போதைப்பொருட்களே, புத்தளம், பாலாவி என்ற இடத்தில் வைத்துஎரியூட்டப்படவுள்ளன.

இந்தப் போதைப்பொருட்களில், இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ்போதைப்பொருள் தடுப்புப் பிரிவு நடத்திய கூட்டு நடவடிக்கையின் போது 2021 டிசம்பரில் கைப்பற்றப்பட்ட 250.996 கிலோ ஹெரோயினும் அடங்கும்.

இந்த சம்பவத்தின்போது, ஆறு வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டனர். மேலும், 2022 ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்ட ஏழு வெளிநாட்டினரிடம் இருந்துகைப்பற்றப்பட்ட 243.052 கிலோ ஹெரோயின் கையிருப்பும் இதில்அடங்கியுள்ளது.

இந்தநிலையில், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், எதிர்வரும் திங்கட்கிழமைகாலை 7.00 மணிக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்திலிருந்து ஹெரோயின்போதைப்பொருட்கள் புத்தளத்துக்கு கொண்டு செல்லப்படும் என்று பொலிஸ்தரப்பு தெரிவித்துள்ளது.

Share this Article