புங்குடுதீவு மத்திய கல்லூரியின் மேம்படுத்தப்பட்ட அதிபர் அலுவலகம் திறந்துவைப்பு!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

பிரித்தானியா புங்குடுதீவு நலன்புரிச்சங்கத்தினால் புங்குடுதீவு மத்திய கல்லூரியின் மேம்படுத்தப்பட்ட அதிபர் அலுவலகம் கடந்த திங்கட்கிழமை (22/12) அன்று அமைப்பின் ஸ்தாபகருள் ஒருவரும் அறக்கட்டளை உறுப்பினருமான மோகனசுந்தரம் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது

நிகழ்வின் பிரதம விருந்தினராக வடமாகாண பிரதம செயலாளரின் பிரதிநிதியாக  வடமாகாண உதவி பிரதம செயலாளர் திருமதி.அனற் அன்ரனி டினேஷ் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்ததுடன் தீவகவலயக்கல்விப்பணிப்பாளர் , அயற்பாடசாலை அதிபர்கள், மதகுருமார்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள்,  வேலணை பிரதேச சபை உறுப்பினர்கள், முன்பள்ளி ஆசிரியர்கள்,புலம்பெயர் தேசத்து உறவுகள் பெற்றோர்கள் நலன்விரும்பிகள்,மாணவர்கள் என பலர் கலந்துகொண்டு நிகழ்வைச் சிறப்பித்திருந்தனர்

Share this Article
Leave a comment