புங்குடுதீவில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு இறுப்பிட்டி அபிவிருத்தி சங்கத்தினால் உதவி வழங்கல் .
புங்குடுதீவில் கொரோனா தொற்று அபாயம் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள 18 குடும்பங்களுக்கும் , புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையில் கடமையாற்றுகின்ற இரு தாதியர்களுக்கும் புங்குடுதீவு உலக மையம் ஊடாக இறுப்பிட்டி அபிவிருத்தி சங்கத்தினரின் ( தலைமையகம் – கனடா ) 40000 ரூபாய் நிதியுதவியில் உலருணவு பொருட்கள் , சுகாதார பாதுகாப்பு பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன.
இச்செயற்பாட்டில் புங்குடுதீவு உலக மையத்தின் செயலாளர் கருணாகரன் குணாளன் , நிர்வாக குழு உறுப்பினர் கருணாகரன் நாவலன் மற்றும் ஜீவா , ராகுலன் , கிராம சேவகர்களான சசிகாந் , சிறீதரன் , கோகுலன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்