புங்குடுதீவு கடற்கரையில் நேற்று (ஜூன் 09) காலை 11.45 மணியளவில், ஒரு திமிங்கிலம் இறந்த நிலையில் கரையொதுங்கியது.
சுமார் 15 அடி நீளமுள்ள இந்த திமிங்கிலம், புங்குடுதீவு கடலில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளது.
இது தொடர்பாக திமிங்கிலம் உயிரிழந்ததற்கான காரணம் இதுவரை உறுதியாகத் தெரியவில்லை. சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.