ஸ்ரீலங்காவின் கொழும்பை அண்மித்த நகரொன்றில் புகையிரத நிலையங்களில் சீன மொழி மற்றும் ஆங்கில மொழியில் மட்டுமே அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டிருந்தமை குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
ஸ்ரீலங்காவின் கொழும்பு நகருக்கு அண்மித்த நகராகிய கல்கிசை புகையிரத நிலையத்தில் கடந்த வாரம் ஆங்கிலம் மற்றும் சீன மொழியில் புகையிரத பயணங்கள் குறித்த நேர அட்டவணை வைக்கப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் இந்த விவகாரம் பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியிருந்ததுடன், அரச மொழியாகிய சிங்களம் மற்றும் தமிழ் மொழிகள் புறக்கணிக்கப்பட்டிருப்பதுவும் சுட்டிக்காட்டப்பட்டு வருகின்றது.
நீண்ட தூர புகையிரத சேவைகளின் விபரங்கள் சீன மற்றும் ஆங்கில மொழிகளில் குறிக்கும் வகையில் அமைந்துள்ள நிலையில் அதில் தமிழ் மற்றும் சிங்கள மொழிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்த அறிவிப்பு பலகையின் படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.