By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: பில்கேட்ஸுடன் ரணில் சந்திப்பு!
Share
Notification
Latest News
உயர்தர பரீட்சை திகதிகள் மற்றும் விண்ணப்ப அறிவிப்பு
இலங்கைச் செய்தி
செம்மணியில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட சில தமிழ் அரசியல் வாதிகள் !
யாழ்ப்பாணம்
வடக்கு மாகாண ஆளுநர் குழுவினர், ஐ.நா. மனித உரிமைகள்ஆணையாளர் சந்திப்பு!
யாழ்ப்பாணம்
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செம்மணிக்கு விஜயம்!
யாழ்ப்பாணம்
நயினாதீவு நாகபூஷணியின் கொடியேற்றம் நாளை!
தீவகச் செய்தி
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > இலங்கைச் செய்தி > பில்கேட்ஸுடன் ரணில் சந்திப்பு!
இலங்கைச் செய்தி

பில்கேட்ஸுடன் ரணில் சந்திப்பு!

Last updated: 2023/12/04 at 10:53 AM
Published December 4, 2023 336 Views
Share
1 Min Read
SHARE

காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதில் இலங்கைக்கு ஆதரவளிப்பதாக பில் மற்றும்மெலிண்டா கேட்ஸ் அமைப்பின் (BMGF) இணைத் தலைவர் பில் கேட்ஸ் (Bill Gates) தெரிவித்தார்.

டுபாயில் நடைபெறும் COP 28 மாநாட்டுக்கு இணையாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அமைப்பின் (BMGF) இணைத் தலைவர் பில்கேட்ஸ்க்கும் இடையிலான சந்திப்பு நேற்று (டிசம்பர் 3) இடம்பெற்றது.

காலநிலை மாற்றத்தைக் குறைக்கும்உலகளாவிய சவால் மற்றும் வெப்பவலயப் பிராந்தியத்தில் இலங்கையின் பங்களிப்பை மேம்படுத்துவது குறித்தும் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

இலங்கையில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வது தொடர்பான வேலைத்திட்டங்களுக்கு பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அமைப்பு ஏற்கனவே தமது பங்களிப்ப வழங்கி வருவதாகவும், எதிர்காலத்தில் இந்த ஒத்துழைப்பு மேலும் விரிவுபடுத்தப்படும் எனவும் பில்கேட்ஸ் தெரிவித்தார்.

இலங்கையின் விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டம் மற்றும் விவசாயத்திற்கான தரவுக் கட்டமைப்பை நிறுவுவதற்கான முயற்சிகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன், டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தியில் இலங்கையுடன் ஒத்துழைப்பை அதிகரிக்க எதிர்பார்க்கப்படுவதாகவும் பில் கேட்ஸ் குறிப்பிட்டார்.

காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கான கூட்டு அர்ப்பணிப்பின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் COP28 மாநாட்டில் இலங்கை முன்வைத்த முன்மொழிவுகள் குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பில்கேட்ஸிடம் தெளிவுபடுத்தியதுடன், உலகிற்கே சவாலாக மாறியுள்ள சுற்றாடல் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான சர்வதேச முயற்சிகளில் பயனுள்ள பங்கை வகிக்க இலங்கை தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் சுற்றாடல் அமைச்சர் கலாநிதி கெஹலிய ரம்புக்வெல்ல, காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜயவர்தன, சுற்றாடல் அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டதுடன், இலங்கையில் காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதில் பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அமைப்புடன் பரந்த அளவிலான மற்றும் பயனுள்ள பங்காளித்துவத்தை ஏற்படுத்தக்கூடிய துறைகள் குறித்தும் பிரதிநிதிகள் கலந்துரையாடினர்.

You Might Also Like

உயர்தர பரீட்சை திகதிகள் மற்றும் விண்ணப்ப அறிவிப்பு

இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !

சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!

கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கு லைக்கா ஞானம் உபகாரம்!

வாகன இலக்கத் தகடுகளை அச்சிடுவதில் தாமதம்!!

கெஹெலிய குடும்பம் பிணையில் விடுதலை!

கிராமிய வீதிகள் 1000 அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆரம்பம்!

கதிர்காம பாதயாத்திரை காட்டுப்பாதை கிழக்கு மாகாண ஆளுநரால் திறந்து வைப்பு!

Anarkali December 4, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article மன்னார் பிரீமியர் லீக் சுற்றுப் போட்டியில் மோதல்!- இருவர் காயம்!
Next Article யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் உயர்தரம் கற்க விண்ணப்பம் கோரல்!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

உயர்தர பரீட்சை திகதிகள் மற்றும் விண்ணப்ப அறிவிப்பு
செம்மணியில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட சில தமிழ் அரசியல் வாதிகள் !
வடக்கு மாகாண ஆளுநர் குழுவினர், ஐ.நா. மனித உரிமைகள்ஆணையாளர் சந்திப்பு!
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செம்மணிக்கு விஜயம்!

You Might Also Like

இலங்கைச் செய்தி

உயர்தர பரீட்சை திகதிகள் மற்றும் விண்ணப்ப அறிவிப்பு

June 26, 2025
இலங்கைச் செய்தி

இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !

June 23, 2025
இலங்கைச் செய்தி

சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!

June 22, 2025
இலங்கைச் செய்தி

கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கு லைக்கா ஞானம் உபகாரம்!

June 21, 2025
இலங்கைச் செய்தி

வாகன இலக்கத் தகடுகளை அச்சிடுவதில் தாமதம்!!

June 21, 2025
இலங்கைச் செய்தி

கெஹெலிய குடும்பம் பிணையில் விடுதலை!

June 21, 2025
இலங்கைச் செய்தி

கிராமிய வீதிகள் 1000 அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆரம்பம்!

June 21, 2025
இலங்கைச் செய்தி

கதிர்காம பாதயாத்திரை காட்டுப்பாதை கிழக்கு மாகாண ஆளுநரால் திறந்து வைப்பு!

June 20, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?