பிரபல போதை பொருள் வியாபாரி கைது.

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

உரும்புராய் செல்வபுரம் பகுதியில் வசிக்கும் பிரபல போதை பொருள் வியாபாரி நேற்று இரவு 11 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளதாக கோப்பாய் போலீசார் தெரிவித்தனர்.

கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலுக்கு அமைய புலனாய்வு போலீசார் இந்த கைது நடவடிக்கை இனை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது சந்தேக நபரின் உடமையில் இருந்து 5 கிராம் 400 மில்லி கிராம் ஹெரோயின் போதை பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபருக்கு வயது 28 என போலீசார் தெரிவித்தனர்.

இவர் உரும்புராய் பகுதியில் வசித்து வரும் பிரபல போதை பொருள் வியாபாரி என பொலீசார் தெரிவித்தனர்.

அத்துடன் கல்வியங்க்காட்டு பகுதியில் வைத்து நேற்று இரவு 31 வயதுடைய சந்தேக நபர் 1 கிராம் 400 மில்லி கிராம் ஹெரோயின் போதை பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் நாயன்மார்கட்டு பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரையும் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

Share this Article