பிரபல அரசியல்வாதிகள் பொதுத் தேர்தலில் போட்டியிடாத முதல் முறை.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

பிரபல அரசியல்வாதிகளான மஹிந்த ராஜபக்ச, ரணில் விக்கிரமசிங்க, பாட்டலி சம்பிக ரணவக, விமல் வீரவன்ஸ உள்ளிட்ட பலர் இந்த பொதுத் தேர்தலில் போட்டியிடாத முதல் சந்தர்ப்பம் இதுவாகும் என தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் தெரிவித்துள்ளன.

இதனால், இந்த தேர்தல் மிகவும் தீர்மானமிக்கதாக மாறியுள்ளதாக சுதந்திரமான மற்றும் நீதியான தேர்தலுக்கான மக்கள் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி குறிப்பிட்டார்.

இந்த முறை 50-க்கும் மேற்பட்ட முக்கிய அரசியல்வாதிகள் பொதுத் தேர்தலில் போட்டியிடவில்லை என்று ஜனநாயக மறுசீரமைப்பு மற்றும் தேர்தல் கண்காணிப்பு நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் மஞ்சுள கஜநாயக்க தெரிவித்துள்ளார்.

Share this Article