பிணையில் விடுவிக்கப்பட்ட வியாழேந்திரனுக்கு மீண்டும் விளக்கமறியல்

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

இலஞ்ச வழக்கில் கைதாகி பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த முன்னாள்இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன், பிணை நிபந்தனைகளைநிறைவேற்ற முடியாததால் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி நேற்று (ஏப்ரல்08) பிற்பகல், சந்தேக நபரான முன்னாள் இராஜாங்க அமைச்சரை பிணையில் விடுவிக்கஉத்தரவிட்டிருந்தார்.

ஆனால், பிணை நிபந்தனைகளை அவர் பூர்த்தி செய்யத் தவறியதால், அவர்மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொலன்னறுவை பகுதியைச் சேர்ந்த ஒரு தொழிலதிபரிடமிருந்து மணல்அனுமதிப் பத்திரம் வழங்குவதற்காக 1.5 மில்லியன் ரூபா இலஞ்சம் பெறுவதற்குஉதவியதாக சந்தேகத்தின் பேரில் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

முன்னதாக, கடந்த மார்ச் 25 அன்று இலஞ்ச ஊழல் புலனாய்வு ஆணைக்குழுஅவரை கைது செய்து, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில்ஆஜர்படுத்தியது.

முதலில் அவர் ஏப்ரல் 1 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில், பின்னர்அவரது விளக்கமறியல் காலம் நேற்று வரை நீடிக்கப்பட்டிருந்தது.

இதன்போது பிணையில் விடுவிக்கப்பட்டாலும், பிணைக் நிபந்தனைகளைபூர்த்தி செய்ய முடியாததால், அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Share this Article